யாழ். புங்குடுதீவு 12ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், புங்குடுதீவு கிழக்கு, மத்தி, யாழ்ப்பாணம், கொழும்பு, பாணந்துறை ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த பிரபல வர்த்தகரும் சமூக சேவையாளர் வள்ளல் பெருந்தகை அமரர் ஸ்ரீமான் உயர்திரு செல்லப்பா பேரின்பம் அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஐந்தாண்டுகள் கடந்து விட்டதா
நம்பவே முடியவில்லை அப்பா!
ஆண்டுகள் நீளலாம் ஆனால்
உங்கள் நினைவுகள் நீங்காது!
கலைந்து செல்லும் மேகமென
காலங்கள் கடந்து போகின்றனவே
ஆனாலும் உங்கள் நினைவுகள்
புயலென எரிமலையென
கடலலையென எம் மனங்களில்
பொங்கிப்பிரவாகித்துக் கொண்டே இருக்கும்!
வீசும் காற்றினிலும் நாம்
விடும் மூச்சினிலும்
எட்டு திக்குகளிலும் உங்கள் நினைவால்
வாடுகிறோம் அப்பா!
எத்தனை ஆண்டுகள் சென்றாலும் - எம்மை
பாசத்தின் சுமையோடு அரவணைத்துக் காத்த
எமது அன்புத் தெய்வமே அப்பா
உங்கள் நினைவலைகள் என்றும் எம்
நெஞ்சினில் நீங்காமல் நிலைத்திருக்கும்!
என்றும் உங்கள் நினைவுகளுடன்
வாழும் குடும்பத்தினர்...
நான்கு வருடங்களுக்கு முன், நாம் பெருமையுடன் உறவுகொண்ட அமரர், தம் உழைப்பாலும், நெஞ்சுறுதியாலும், உயரங்களைத் தொட்டவர். இவ்வுலக வாழ்வை பூரணப்படுத்தி விடைபெற்ற அவருக்கு, பேரின்பப்பேறு...