2ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 08 AUG 1934
இறப்பு 17 JAN 2020
அமரர் செல்லப்பா தம்பிப்பிள்ளை
வயது 85
அமரர் செல்லப்பா தம்பிப்பிள்ளை 1934 - 2020 இளவாலை சித்திரமேழி, Sri Lanka Sri Lanka
Tribute 2 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். இளவாலை சித்திரமேழியைப் பிறப்பிடமாகவும், உடுவில் கிழக்கை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த செல்லப்பா தம்பிப்பிள்ளை அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி. 

திதி: 24-01-2022

மறவா நினைவுகளை மனதோடு தந்துவிட்டு
இறையோடு சென்று இன்றுடன் இரண்டு ஆண்டுகள் ஆகுதைய்யா
 வார்த்தைகளால் சொல்ல முடியாத வலிகள்
உங்கள் இழப்பு

உங்கள் புன்சிரிப்பும் பாசம் நிறைந்த
அரவணைப்பும் எங்களை ஒவ்வொரு
 நாளும் ஏங்க வைக்கிறது அப்பா

காலங்கள் தான் போனதப்பா
 உங்களை பிரிந்த வேதனை
இன்னமும் குறையவில்லையப்பா

உன் அன்பை தோற்கடிக்கும்
மற்றொரு அன்பை
உலகில் யாரும் தரப்போவது இல்லை
உன்னை தவிர அப்பா

உங்கள் அன்பான நினைவுகளோடு
இன்று வாழ்கின்றோம் அப்பா...!


தகவல்: குடும்பத்தினர்