யாழ். இளவாலை சித்திரமேழியைப் பிறப்பிடமாகவும், உடுவில் கிழக்கை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த செல்லப்பா தம்பிப்பிள்ளை அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும்.
உங்களை உருக்கி எமக்காக
உயிர் உள்ளவரை வாழ்ந்தீர்கள்
எங்களை நினைத்து எங்களுக்காய்
இவ்வுலகில் எல்லாம் செய்தீர்கள்!
தங்களை இழந்து ஒரு மாதம்
தாண்டியதெப்படிப் புரியவில்லை
இங்கு நீங்கள் இல்லை என்று
எண்ணிட எம்மால் முடியவில்லை!
மனம் என்றும் ஆறாத்துயரோடு
மீளாத் துயில் கொண்ட
உங்கள் ஆத்மா சாந்தி அடைய
எங்கள் இருகண்ணீர் மலர் தூவி
இறைவனோடு இணைய வேண்டி
அஞ்சலி செய்கின்றோம்......!!!
அன்னாரின் அந்தியேட்டிக்கிரியை 14-02-2020 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 07:00 மணியளவில் கீரிமலை புனித தீர்த்தக்கரையிலும், வீட்டுக்கிருத்தியக்கிரியைகள் 16-02-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 11:30 மணியளவில் அவரது இல்லத்திலும் நடைபெறவுள்ளது. இந்நிகழ்விற்கு தாங்களும் தங்கள் குடும்பசகிதம் வருகை தந்து அவரது ஆத்மசாந்திப் பிரார்த்தனையிலும் அதனைத்தொடர்ந்து நடைபெறும் விருந்துபசாரத்திலும் கலந்துகொள்ளும் வண்ணம் அன்புடன் அழைக்கின்றோம்.