யாழ். இளவாலை சித்திரமேழியைப் பிறப்பிடமாகவும், உடுவில் கிழக்கை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த செல்லப்பா தம்பிப்பிள்ளை அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
எங்கள் அன்பு அப்பாவே
இதயத் துடிப்பின் அருமருந்தே
காலம் செய்த கோலத்தினால்
ஓவ்வொரு கணப் பொழுதும்
துடிக்கின்றோம்!
ஆண்டொன்று ஆனாலும் மனம்
ஆற மறுக்கிறது- அப்பா
புன்னகை புரியும் உங்கள்
முகம் தெரிகிறது தினம் தினம்!
உங்கள் ஒழுக்கம் நற்பண்பு
மதிப்புகள் யாவும் எங்கள் வாழ்வில்
என்றென்றும் வழிகாட்டியாக இருக்கும்!
மாதங்கள் பன்னிரெண்டு ஆனாலும்
அழியாது எம் துயரம்
மறையாத உங்கள் நினைவு!
மீண்டும் ஒரு பிறவி உண்டென்றால்
உங்களுக்கு பிள்ளைகளாக பிறக்கும்
பேறு பெற வேண்டும்- அப்பா!
என்றென்றும் உங்கள் நினைவுகளோடு
வாழ்ந்து கொண்டிருக்கும்
உங்கள் அன்பு பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்.
அன்னாரின் 1ம் ஆண்டு திவசக்கிரியை 04-02-2021 வியாழக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெறும். அத்தருணம் தங்கள் வருகை தந்து அன்னாரின் ஆத்மா சாந்திப் பிராத்தனையிலும், மதிய பேசன நிகழ்விலும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.