திதி: 25-10-2021
யாழ். புங்குடுதீவு 12ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்டிருந்த செல்லமுத்து கந்தையா அவர்களின் 7ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆல மர விருஷ்சிகமாக நிழல் பிரகாசித்தாயே
நாங்கள் கண் உறங்கி விழிக்கும் பொழுது
நான் தோள் மீது தாலாட்ட என் பச்சைக் கிளியே
நீ தூங்கு தாய் போல தாலாட்ட என் செல்லமே
நீ தூங்கு உன் மடி மீது தாலாட்டி வளர்தாயே....
உன் தேகத்தை மண் மூடிக் கொண்டாலும்
உன் குரல் ஓசை என் மனதை விட்டு போகவில்லை
ஏழு ஆண்டில் ஏழு பிறவி எடுத்தாலும் உன் உருவம்
நான் மறவேன் அம்மம்மா வலம் புரி சங்காய் நாலு திசையும்
வலம் வந்தாய் இன்று உடன் ஏழு ஆண்டு காலம் ஓடி மறைந்ததுவோ
எங்களைப் பெற்ற உத்தமியே எங்கு சென்றாய்..
உன்னுடைய நூறு ஆண்டு கால அகவை முடிந்தாலும்
உன் வாழ்க்கை வரலாற்று கால் பதித்த வையகத்திலே
ஆல மர நிழலிலே அரச மர நிழலிலே வீற்றிரிருக்கும்
பெத்தபார் என்று சொல்லப்படும் அந்த
திரு சன்னிதானதில் 25-10-2021 திங்கட்கிழமை அன்று
மோட்ச ஞாபக ஆராதனையும் அன்று நடைபெறுகின்ற
மதிய போசனை நிகழ்வுகளும் எங்கள் அன்னையின்
ஆன்மா நித்திய சாந்தி அடைய மீண்டும்
பிறப்பு உண்டோ உன்னை என்றும்
மறவாமை வேண்டும் அம்மம்மா...
ஒம் சாந்தி! ஒம் சாந்தி! ஒம் சாந்தி!
May her soul rest in peace and her legacy continue to provide strength and comfort for her loved ones.