யாழ். புங்குடுதீவு 12ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்டிருந்த செல்லமுத்து கந்தையா அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
உயிர் தந்த உத்தமியே
அன்பின் பிறப்பிடமே
மனிதரில் மணியேயாகி
மாண்பினில் கனியேயாகி
உன் பொன் வண்ண திருமுகம் காணாமல்
ஐந்து ஆண்டுகள் ஓடி மறைந்ததுவோ அம்மா
தனி மரத்தை தோப்பாக்கிய தெய்வமே
காலத்தில் அழியாத எம் இல்லக விளக்கே
உன் நிழல் எங்கள் ஆல மர விருட்சம் அம்மா
கனீர் என்ற மணி ஓசையான குரல் நாம்
கேக்காமல் நாக்கோ வறண்டதம்மா
ஆசை மொழி பேசி
அக்கறையோடு மனம் மகிழ்ந்த
வார்த்தைகள் புன்னகை உதிர்ந்த சிரிப்பு
அம்மம்மா நாங்கள் எப்போ காண்போம்
என் கண் ஈரம் காயந்து விடும்
என் மனம் ஈரம் காயாது அம்மம்மா
நிள நினைந்தடியேன் உமை நித்தமும்
கை தொழுவேன்
கடைசியாக உன் திருமுகம் பார்க்க கொடுக்க
பலன் இல்லா பாவியானேன்
மண்ணிலே வந்து பிறந்த பிறவியே
இனி யாரை நினைப்பேனோ
ஆன்மா சாந்தி பெற இறைவன் பாதம்
வேண்டி நிற்கின்றோம்
பிரிவால் துயருறும் மக்கள், மருமக்கள்,
பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள்.
May her soul rest in peace and her legacy continue to provide strength and comfort for her loved ones.