11ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் செல்லம்மா சுப்பிரமணியம்
விண்ணில்
- 10 NOV 2013
Tribute
10
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
யாழ். பன்னாலை தெல்லிப்பழையைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வதிவிடமாகவும் கொண்டிருந்த செல்லம்மா சுப்பிரமணியம் அவர்களின் 11ம் ஆண்டு நினைவஞ்சலி.
எங்கள் உயிரில் கலந்த தாயே!
எமைவிட்டு பிரிந்து ஆண்டுகள் 11
ஓடி மறைந்ததம்மா...
நித்தம் எங்கள் கண்களுக்குள்
நிறைந்திருக்கும் எங்கள் அன்புத் தாயே
நினைவெல்லாம் உங்களைச்
சுமந்தல்லோ நிற்கின்றோம்
நிலவை சூரியனை ஒளிர்கின்ற
தாரகைகளை பார்க்கையிலே
அங்கே அம்மா உங்கள் முகம்தானே
பட்டொளியாய் தெரிகிறது
கனவுகள் கூட கலையலாம்
ஆனால் உங்கள் நினைவுகள்
என்றும் எங்கள் மனதை விட்டு கலையாது
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
குடும்பத்தினர்
Dear Amma, I can’t touch you anymore, can’t hear you, can’t see you but I can feel you all the time because you are alive in my heart. My love, we’ll meet again one day!