
அமரர் செவாலியர் அடைக்கலமுத்து
அமுதுப் புலவர்
இறப்பு
- 23 FEB 2010
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
மனதில் தொட்டு என் தந்தைக்கு நான் எழுதுவது
உயிர் கொடுத்து,உணவூட்டி, தாலாட்டுப்பாடி
உறங்க வைத்து, கற்க வைத்து, மேடையில் பேசப்பழக்கி
வாழ்வில் முன்னேற வழி அமைத்து,
இறைபக்தியும், சமூக சேவையும் தேவை என,
நீங்கள் காட்டிய பாதையில் ஓரளவு நடக்க வைத்த
பெருமைக்குரிய என் தந்தையை
அமுதுப்புலவர் மகள் என்று கூறுவதில்,
எனக்கு ஓர் தனிப்பெருமை.
தமிழ் மொழிக்கும், தமிழ் பேசும் மக்களுக்கும்,
ஆற்றிய சேவை உலகறியும்.
குடும்ப சேவையை நாங்கள் அறிவோம்
பப்பா வீட்டின் ஓன்று கூடல்களை பேரப்பிள்ளைகள்
மறக்க மாட்டார்கள்.
எவருக்கும் பாரமாக இருக்க கூடாது என
சட்டென்று இவ்வுலகை விட்டு போய் விட்ட போதும்
உங்கள் அளப்பரிய சேவைகளை,
மாணவ உலகம், தமிழ் பேசும் உலகம் மறந்து போகாது.
எங்கள் மனதில் உங்கள் நினைவுகள், உயிர் உள்ளவரை
நிலைத்து நிற்க, வாழ வைத்த பெருமை உங்களுக்கே
உரியது.
என்னை, என்னால் முடிந்தவரை விட, அதிகமாக உயர வைத்த
என் தந்தைக்கு தலை வணங்கி,
ஆன்மா சாந்தி பெற வேண்டுகிறேன்.
Write Tribute