Clicky

15ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் செவாலியர் அடைக்கலமுத்து
அமுதுப் புலவர்
இறப்பு - 23 FEB 2010
அமரர் செவாலியர் அடைக்கலமுத்து 2010 யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka
Tribute 16 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

இளவாலையிலும் பின்னர் முதிர் வயதில் லண்டனில் வசித்துவந்தவருமான "அமுதுப்புலவர்" எனத் தமிழ்கூறும் நல்லுலகில் இனிதே அறியப்பெற்ற செவாலியர் கலாநிதி அடைக்கலமுத்து அவர்களின் 15ம் ஆண்டு நினைவஞ்சலி.

ஆண்டுகள் பதினைந்து சென்றன
அருகில் நீங்கள் இல்லாததால் உங்கள்
அன்பு தனை இழந்தோமே நாம்!

அடுத்தொரு பிறப்பு உண்டென்றால்
அப்பொழுது மட்டுமல்ல- ஏழேழு
பிறப்பிலும் எமக்கே அப்பாவாய்
பிறந்திட வேண்டுகிறோம் அப்பா!

வானத்தை விட்டு நிலவையும்
வாசத்தை விட்டு மலரையும்
பிரிக்க முடியாது- அதுபோல
உங்கள் நினைவுகளை- எங்கள்
நெஞ்சை விட்டும் விலக்கமுடியாது 

நெஞ்சில் உங்கள் நினைவுகளை சுமந்தே
நெடுங்காலம் நாம் இங்கே
நிலைத்து வாழ்வோமே
வானில் விண்மீனாய் இருந்து
எம் வாழ்வை வளப்படுத்துவீரே!

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!  

தகவல்: அமுது அரசன் மற்றும் அமுது குடும்பத்தினர்

Photos

Notices