Clicky

16ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் செவாலியர் அடைக்கலமுத்து
அமுதுப் புலவர்
இறப்பு - 23 FEB 2010
அமரர் செவாலியர் அடைக்கலமுத்து 2010 யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka
Tribute 17 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

நெடுந்தீவு உதயபதியைப் பிறப்பிடமாகவும் லண்டனில் வசித்துவந்தவருமான "அமுதுப்புலவர்" எனத் தமிழ்கூறும் நல்லுலகில் இனிதே அறியப்பெற்ற செவாலியர் கலாநிதி சவரிமுத்து அடைக்கலமுத்து அவர்களின் 16ம் ஆண்டு நினைவஞ்சலி.

அன்புத் தெய்வமே எங்கள் ஆருயிர் அப்பாவே
 அன்போடும் பண்போடும் அயாரமல் காத்தவரே

16 ஆண்டு ஆனதுவோ அப்பா
 நீங்கள் இன்றி ஆறாத் துயரில்
 நாம் அனுதினமும் தவிக்கின்றோம்.
 ஆயிரம் உறவுகள் அருகில் இருந்தாலும்
 அப்பா உங்கள் அன்புக்கு அது ஈடாகுமா
 எல்லாம் இந்தென்ன எம்மோடு நீயின்றி
 இதயம் கனக்கிறது எழுதிய விதி எண்ணி
 நேற்றுபோல் எல்லாமே நெஞ்சுக்குள் நிக்குதய்யா

நித்தம் உனைநினைத்து சித்தமும் துடிக்குதய்யா
 காலங்கள் விடைபெறலாம் ஆனாலும்
கண்முன்னே நீ வாழ்ந்த நினைவுகள்
 ஒருபோதும் அகாலது
வலிகள் சுமந்து விழிகள் நனைந்து வாழும்
நாள் முழுக்க உன்னை நினைந்து
வாழும் உன் குடும்பத்தினர்.

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!

தகவல்: அமுது அரசன் மற்றும் அமுது குடும்பத்தினர்

Photos

Notices