14ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் செவாலியர் அடைக்கலமுத்து
அமுதுப் புலவர்
இறப்பு
- 23 FEB 2010
Tribute
16
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
நெடுந்தீவு உதயபதியைப் பிறப்பிடமாகவும் லண்டனில் வசித்துவந்தவருமான "அமுதுப்புலவர்" எனத் தமிழ்கூறும் நல்லுலகில் இனிதே அறியப்பெற்ற செவாலியர் கலாநிதி சவரிமுத்து அடைக்கலமுத்து அவர்களின் 14ம் ஆண்டு நினைவஞ்சலி.
என் குடும்பத்தின் ஒளி விளக்கே
எம்வாழ்வின் விடிவெள்ளியே
புன்னகை பூத்த உங்கள் முகமே..!
அன்பு தெய்வத்தின் இனிய
நினைவுதனை மனதில்
சுமந்து வாழுகின்றோம்
விண்தேடி விரைந்து சென்றதனால்
புண்பட்ட இதயத்தை ஆற்ற
வழியின்றி கண்ணீரைக்
காணிக்கை ஆக்குகின்றோம்
நேற்று நடந்தது போல் நினைப்பு
ஆனால் 14 ஆண்டுகள்
நிறைவுற்ற போதும் என்றும்
உங்கள் நீங்கா நினைவுகளை
சுமந்தவராய் உங்கள் ஆத்மாவின்
சாந்திக்காய் பிரார்த்திக்கின்றோம்
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
தகவல்:
குடும்பத்தினர்