யாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வதிவிடமாகவும் கொண்ட சத்தியநாதன் சிவகுமாரசிங்கம் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
ஒரு முறைதான் இப்பிறவி
போனால் வாரது என்று தெரிந்தும்
போகும் வழி எல்லாம் - பாவி
என் மனம் உங்களைத் தேடுகின்றதே!
பிரிக்க முடியாத சொந்தமும்
மறக்க முடியாத பந்தமும்
தவிர்க்க முடியாத உயிரும்
எல்லாமே உன் அன்பு மட்டுமே !
கண்முன்னே நீங்கள் வாழ்ந்த காலம்
கனவாகிப் போனதுவோ! அப்பா
எமை ஒரு நிமிடமும் காணாவிட்டால்
துடித்து பதை பதைத்த நினைவுகளை
இன்னும் கண்ணீர் விழி நனைக்குதப்பா!
எங்கள் அன்பு தெய்வத்தின் மறைவுச்செய்தி கேட்டு இல்லம் நாடி ஓடி வந்து கண்ணீர் சிந்தியவாறு எமக்கு ஒத்தாசைகள் புரிந்தவர்களுக்கும், ஆறுதல் தேறுதலும் கூறிய அன்புள்ளங்கள் அனைவருக்கும், தொலைபேசி அனுதாப அட்டைகள் மற்றும் சமூக வலைத்தளங்கள் மூலமாக அனுதாபங்கள் தெரிவித்த உள்நாட்டு, வெளிநாட்டு, உறவினர்கள், நண்பர்கள் அனைவருக்கும் கண்ணீர் அஞ்சலி பிரசுரித்த அன்பர்களுக்கும், மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தியோருக்கும் மற்றும் இறுதி நிகழ்வில் கலந்து கொண்ட அனைவருக்கும் பல வழிகளிலும் உதவி செய்தவர்களுக்கும் எமது இதயம் நிறைந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
Thinking of you {mama}