யாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வதிவிடமாகவும் கொண்டிருந்த குமாரசிங்கம் சத்தியநாதன் அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டு மூன்று ஆனதுவே எமையழவிட்டு
ஆறிடுமோ எம் துயரம் எமைவிட்டு
மாண்டவர் மீண்டதில்லை இது மானிடநியதி ஆனாலும்
ஆண்டவன் செயலை எண்ணி ஆறிடவும் முடியவில்லை
நீண்டு செல்லும் நாட்களிலே நிழல் வடிவில் தெரிகின்றிர்
தேடித்தவிக்கின்றோம் தென்படுமிடமெல்லாம்
காணாமல் கேளாமல் கலங்குகின்றோம் நாம் தினமும்
காத்திருக்கும் உம் உறவுகளின் கவலை தீர்க்க
கல்லறை திறந்து வருவீரோ ஒரு முறை..!
அனுதினமும் தெரிகின்ற எம் குடும்பத்
தெய்வமானவரேமாண்டவர்களோடு நீங்கள்
விண்ணுலகில் வாழ்ந்தாலும்
மனதாலும் நினைவாலும்
தினம்! தினம்! துடிக்கின்றோம்
காலங்கள் விடை பெறலாம் ஆனாலும்
கண்முன்னே நிழலாடும் உம் நினைவுகள்
பல ஆண்டுகள் சென்றாலும் எம் உயிர்
உள்ளவரை
உம் நினைவில் வாழ்ந்து கொண்டிருப்போம்.
Thinking of you {mama}