யாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வதிவிடமாகவும் கொண்டிருந்த குமாரசிங்கம் சத்தியநாதன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
காலை கண்விழித்த நொடிமுதல் உங்கள் ஞாபகமே
உங்கள் நினைவுகள் எங்கள் மனதில் அழியா சுவடுகளாய் உள்ளன
அன்பும் பண்பும் கொண்ட தெய்வமே
அரவணைத்து வளர்த்த இல்லற சொந்தமே
ஆண்டு ஒன்று சென்றாலும் எம் இதயங்களில்
நினைவுகளாய் நிறைந்து நிற்கிறீர்கள்
ஆயிரம் உறவுகள் இருந்தாலும் உங்களைப்போல்
யார் வருவார்? பொல்லாத காலன் உங்களை
நில்லாமல் கொண்டு சென்றானோ?
நீங்கள் இல்லாத வாழ்க்கை சோகமாக உள்ளது
நீங்கள் பிரிந்த நாள் முதல் இன்று வரை உங்கள்
அன்பிற்கு யாருமில்லை உங்களைப் போல் பகிடிவதை
கூறி எல்லோரையும் சிரிக்க வைப்பதற்கும் யாருமில்லை
அல்லும் பகலும் அயராது உழைத்த தெய்வமே!
சடுதியாய் வந்த கொடியவன் எடுத்துச் சென்றானோ?
உங்கள் பிரிவால் வாடுகின்றோம் எங்கு சென்றீர்கள்
என்று தேடுகின்றோம்
பார்போற்ற புன்சிரிப்பு, பாசமான, நேசமான
உறவாக நெருங்கியே வாழ்ந்தீர்கள் வீசும்
காற்றும் உன்பேர் சொல்லும் வாசமில்லா வசந்தமாய்
துயருறுகிறோம் நல்வழி காட்டிய தெய்வமே தேயாத
நினைவாய் எங்கள் மனதில் பதிந்தாய் ஓயாத
நினைவுகளை எங்கள் உள்ளத்தில் பதிந்தாய்
ஓராண்டு சென்றாலும் உங்கள் நினைவலையில்
நீந்துகின்றோம்.
உங்கள் ஆத்மா சாந்தியடைய
பிரார்த்திக்கின்றோம்..
ஓம் சாந்தி! சாந்தி! சாந்தி
உங்கள் பிரிவால் துயருறும்
மனைவி, பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்
உற்றார், உறவினர்
Thinking of you {mama}