யாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வதிவிடமாகவும் கொண்டிருந்த குமாரசிங்கம் சத்தியநாதன் அவர்களின் 4ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 26-11-2023
நான்கு ஆண்டுகள் ஒரு நிமிடமாக கரைந்துவிட்டது
தீராத ஏக்கத்துடன் இன்னமும்
துடிக்கின்றது எம் இதயம்
உங்கள் இனிய புன்னகை மீண்டும்
ஒருமுறை காண்போமா...
என்னை ஏன் தனியாக தவிக்க வைத்தாய்
நீமட்டும் கல்லறையில் மீளாநித்திரையில்
நானோ உன் நினைவுகளோடு வேதனையுடன்
தனிமையில் தவித்து மாள்கிறேன்
அப்பா உங்களையே உலகமென
உறுதியாய் நாமிருக்க
ஏன் விண்ணுலகம்
நிரந்தரமாய் விரைந்தீரோ?
பாலகராக இருந்த நாம்
பருவ வயதடைந்து வளர்ந்து நிற்கின்றோம்
கூட நின்று தோள் தட்ட
துணையாக நீங்கள் இல்லையேயப்பா?
ஆருயிர் துணை இழந்து
அன்னை படும் துயரம்
ஆற்ற முடியாமல் கண்ணீரினில்
நாம் கலங்கி தவிக்கின்றோம்
நீங்கள் எங்கு சென்றாலும்
எங்கள் நினைவு
உங்களை சுற்றி வரும்
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
உங்கள் நினைவால் வாடும் மனைவி, பிள்ளைகள்..
Thinking of you {mama}