முல்லைத்தீவு புதுக்குடியிருப்பைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சத்தியநாதன் கேனுகன் அவர்களின் 7ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டுகள் ஏழு உருண்டோடி விட்டாலும்
எம் இதயங்கள் இருண்டு தான் இருக்குதய்யா.!
உன் கலங்கமற்ற முகத்தைப் பாராமல்- எம்
கண்கள் இருள் சூழ்ந்து போய் உள்ளதைய்யா..!
மகனே என அணைக்க முடியாத சோகத்தால்- எம்
மனம் இருண்டு போய் உள்ளதைய்யா.!
வாய் விட்டுச் சொல்லவும் வார்த்தையில்லை
மனம் விட்டுப் பேசவும் இன்று நீ இல்லை
என் செய்வேன் எம் செல்லமே
தேடுகின்றோம் எம் பிள்ளை போன திசை
எது என்று தெரியாது?
மொட்டாகி பூவாகி காயாகி கனியாகும்
வேளையில் காத்திருந்து படைத்தவன்
பழி தீர்த்தானோ ?
எங்களை தவிக்க விட்டு
நீர் தூரமாய் சென்றதென்ன?
எங்கள் முகம் காண
வருவாயா ஓர் கணமே?
பிறந்து விட்டோம் இம்மண்ணில்
இறுதிவரை வாழ்வோம் நீ
விட்டுச் சென்ற நீங்காத நினைவுகளோடு... !
நித்தம் நித்தம் உன்னை நினைத்து
ஏங்கும் உன் அன்பு அப்பா, அம்மா.