

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சத்தியநாதன் கேனுகன் அவர்களின் 9ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டுகள் ஒன்பது ஆனாலும் உம்
நினைவுகள் புரலாது எம் இதயத்தில்
விண்ணோரும் தினம்
வியந்த எம் திருமகனே
ஏனோ? நாம் எல்லோரும் தினம்
கலங்க வைத்து போனது ஏனோ?
அன்று விண்ணோரும் - உனை
கவர்ந்து சென்றது தான் ஏனோ?
உன்னை இன்நிலைக்கு ஆளாக்கியது
வஞ்சகர்கள் செய்த சதியோ?
இல்லை இறைவனின் விதியோ?
கடல் வடிவில் காலனவன் வந்து
உன்னை எங்களிடமிருந்து பறித்தானோடா?
மகனே என அணைக்க முடியாத சோகத்தால்- எம்
மனம் இருண்டு போய் உள்ளதைய்யா.!
வாய் விட்டுச் சொல்லவும் வார்த்தையில்லை
மனம் விட்டுப் பேசவும் இன்று நீ இல்லை
என் செய்வேன் எம் செல்லமே
தேடுகின்றோம் எம் பிள்ளை போன திசை
எது என்று தெரியாது?
எம் இதயங்களெல்லாம் நொருங்க
இமைகளெல்லாம் நனைய
எங்களைத் தவிக்கவிட்டு
நெடுந்தூரம் சென்றதேனோ?
ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!
நித்தம் நித்தம் உன்னை நினைத்து
ஏங்கும் உன் அன்பு அப்பா, அம்மா.