Clicky

6ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 16 DEC 1997
இறப்பு 24 AUG 2016
அமரர் சத்தியநாதன் கேனுகன்
வயது 18
அமரர் சத்தியநாதன் கேனுகன் 1997 - 2016 புதுக்குடியிருப்பு, Sri Lanka Sri Lanka
Tribute 3 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சத்தியநாதன் கேனுகன் அவர்களின் 6ம் ஆண்டு நினைவஞ்சலி.

எங்களை விட்டு நீ பிரிந்து
ஆறாண்டு சென்றது!
மறைந்த உன் நினைவு மட்டும்
நெஞ்சில் மாறாமல் உள்ளது மகனே

கலைந்து செல்லும் மேகமென
காலங்கள் கடந்து போகின்றனவே
ஆனாலும் உன் நினைவுகள்
புயலென எரிமலையென
கடலலையென எம் மனங்களில்
பொங்கிப்பிரவாகித்துக் கொண்டே
இருக்கும் மகனே... 

வாழ்ந்த கதை முடியுமுன்னே- நீ
வாழாமல் மாய்ந்ததேனடா?
நூறாண்டு போனாலும்
உன் நிலவு முகம் தேயாதடா
 உன் நினைவுகள் தரும் கண்ணீர்
இவ்வுலகில் நாம் வாழும் வரை வற்றிப் போகாது...

தகவல்: குடும்பத்தினர்