Clicky

5ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 16 DEC 1997
இறப்பு 24 AUG 2016
அமரர் சத்தியநாதன் கேனுகன்
வயது 18
அமரர் சத்தியநாதன் கேனுகன் 1997 - 2016 புதுக்குடியிருப்பு, Sri Lanka Sri Lanka
Tribute 3 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சத்தியநாதன் கேனுகன் அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.

அன்பு மகன் கேனுகன்! ஆறுதில்லை
எம் மனமே!!!
வருடங்கள் ஐந்து உருண்டு ஓடினாலும்
என்றும் எம் கண்முன்னே நிற்கிறது உன் பூமுகம்

உன்னை இன்நிலைக்கு ஆளாக்கியது
வஞ்சகர்கள் செய்த சதியோ?
இல்லை இறைவனின் விதியோ?
கடல் வடிவில் காலனவன் வந்து
உன்னை எங்களிடமிருந்து பறித்தானோடா?

கண்மூடி விழிப்பதற்குள் கணப்பொழுதில்
நடந்தவைகள் நிஜம் தானா என்று
நினைக்கும் முன்னே மறைந்தது ஏனோ?

இளமையில் உயிர் பிரிந்தாய்
இதயத்தில் உறைந்து நின்றாய்
நீ இல்லா இவ்வுலகு எமக்கு வெற்றிடமே!

எங்கும் நீ நிறைந்தாய்
எதிலும் நீயே நிறைந்தாய்
எங்களில் கண்களில் - நீர் நிறைத்து
நிஜத்தில் ஏன் மறைந்தாய்?

தகவல்: குடும்பத்தினர்