Clicky

5ம் ஆண்டு நினைவஞ்சலி
தோற்றம் 15 JAN 1978
மறைவு 16 SEP 2020
அமரர் சதீஸ்குமார் சண்முகநாதன் (அருள்)
வயது 42
அமரர் சதீஸ்குமார் சண்முகநாதன் 1978 - 2020 புங்குடுதீவு 7ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 11 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்டிருந்த சதீஸ்குமார் சண்முகநாதன் அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.

அன்பின் திருவுருவே
பண்பின் உறைவிடமே
கலைகளில் சிறந்தவனே
எமதருமை சதீஸ்! 

 என்றும் சிரித்த முகத்துடையோனே
ஈர்க்கும் இசையாய் நீடு புகழ் கொண்டவனே
எம் மனங்களில் என்றும் வாழ்பவனே
எமதருமை சதீஸ்! 

நீண்ட காலம் எம்மோடு வாழ்ந்திருவாய்
என எண்ணி பல எண்ணங்கள் கொண்டிருந்தோம்

ஐந்து ஆண்டுகள் கடந்து சென்றாலும்
ஒவ்வொரு நொடிகளிலும்
இதயத்தின் துடிப்பைப் போல்
அருகிலே நீங்கள் வாழ்வதை
நாம் உணருகின்றோம்

 உனை நினைக்கும் போதெல்லாம் இதயத்தில் வலிகள்!
விழிகளில் கண்ணீர்! மௌனத்தின் மொழிகள்!
மீண்டுமோர் பிறப்பிருந்தால்...
எங்களிடமே வந்துவிடு...

தகவல்: குடும்பத்தினர்