3ம் ஆண்டு நினைவஞ்சலி
    
                    
            அமரர் சதீஸ்குமார் சண்முகநாதன்
                            (அருள்)
                    
                            
                வயது 42
            
                                    
            
        
            
                அமரர் சதீஸ்குமார் சண்முகநாதன்
            
            
                                    1978 -
                                2020
            
            
                புங்குடுதீவு 7ம் வட்டாரம், Sri Lanka
            
            
                Sri Lanka
            
        
        
    
                    Tribute
                    11
                    people tributed
                
            
            
                உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
            
        யாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்டிருந்த சதீஸ்குமார் சண்முகநாதன் அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 14-10-2023
எங்களை விட்டு நீ பிரிந்து
மூன்று ஆண்டு சென்றது
மறைந்த உன் நினைவு மட்டும்
நெஞ்சில் மாறாமல் உள்ளது 
ஆண்டவன் அழைத்திட்ட பின்னாலே
அழுகிறது இதயம் வெறுமையாகவே
கலைந்து செல்லும் மேகமென
காலங்கள் கடந்து போகின்றனவே
ஆனாலும் உன் நினைவுகள்
புயலென எரிமலையென
கடலலையென எம் மனங்களில்
பொங்கிப்பிரவாகித்துக் கொண்டே இருக்கும் 
வாழ்ந்த கதை முடியுமுன்னே- நீ
வாழாமல் மாய்ந்ததேனடா?
நூறாண்டு போனாலும் உன்
நிலவு முகம் தேயாதடா!
உன் நினைவுகள் தரும் கண்ணீர்
இவ்வுலகில் நாம் வாழும் வரை
வற்றிப் போகாது.
                        தகவல்:
                        குடும்பத்தினர்
                    
                                                        
                    
                    
            
எமது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கின்றோம் அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகின்றோம். Varatharajah Family