Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
மலர்வு 12 DEC 1930
உதிர்வு 17 NOV 2020
அமரர் சரவணமுத்து சின்னப்பிள்ளை 1930 - 2020 பலாலி, Sri Lanka Sri Lanka
Tribute 5 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

யாழ். பலாலி அம்மன் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், இராமநாதபுரம் 6ம் யூனிற்றை வசிப்பிடமாகவும், வவுனியா உக்குளாங்குளத்தை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட சரவணமுத்து சின்னப்பிள்ளை அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

வானத்தில் நிலவாய்
வையகத்தில் தென்றலாய்
எங்கள் இதயத்தில்
என்றென்றும் வாழும் தாயே
நாம் வாழும் வரை
உங்கள் நினைவுகள் எம்முடன் வாழும்

அன்பு என்னும் அறிவை எமக்கு
ஊட்டி வளர்த்த அம்மாவே 
உங்களை இழந்தோம் என்பதை
எம் மனம் ஏற்க மறுக்கிறது

மரணம் என்பது இயற்கைதான்
அதை ஏற்பது மனித இயல்புதான்
ஏனோ இதயம் வலிக்கிறது
அது ஏனென்று புரியவில்லையம்மா!

அளவற்ற உம் அன்பிற்காய்
அலைகிறது எங்கள் மனம்...
மறுபடியும் உங்கள் வருகைக்காய்
காத்திருப்போம் இவ்வுலகில்...

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.

தகவல்: திருநாவுக்கரசு சரவணமுத்து

Photos

Notices

மரண அறிவித்தல் Wed, 18 Nov, 2020
நினைவஞ்சலி Wed, 16 Dec, 2020