நத்தார் வந்து வருசமும் பிறந்தது - எம்மினிய அத்தார் அக்கா பிள்ளைகளோடு இனிதிருந்தவர் செத்தார் எனும் போது மனசு தாங்கலையே! எத்தாலும் மறவாது என்றும் நினைந்திருப்போம் முத்தாக ஒளிர்ந்த முழுநிலவே எங்கு சென்றாய்? வரமாய்க் கிடைத்த எங்கள் பரமேஸ்வரமே! வலக் கரமாய் இருந்து காத்த அன்பின் பரமேஸ்வரமே உரமாய் இருந்து பலம் தந்த பரமேஸ்வரமே! தரமாய்த் தங்கமாய் ஒளிர்ந்த பரமேஸ்வரமே! பழ மரமாய் வீழப் பறவைகளாய்த் துடிப்பதைக் காண்கிலையோ? வாளென ஒன்று போல் காட்டி உயிரீரும் நாளது உனக்கின்று ஏன் வந்ததுவோ? ஆளாக்கி எமை எல்லோரையும் அழகு பார்த்தவரை பாழாகிப் போன விதி கொண்டு சென்றதுவோ? தாளாமல் துடிக்கின்றோம் எங்குற்றாய் எம் உறவே? ஞாலமெல்லாம் போற்ற நற்பெயரோடு வாழ்ந்தவரை கோலாகலமாய் எம்முடன் கூடியிருந்து களித்தவரை காலமெல்லாம் கண் கலங்காது காத்த உத்தமரை காலதேவனே எங்கழைத்துச் சென்றனை சொல்? 06.01.2022ஆலகாலமுண்ட பரமேஸ்வரன் பாதம் சென்றனையோ? ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!! ஆறாத்துயரோடு பாஸ்கரன் ரஞ்சனமாலா குடும்பம்.
real hero, real husband , real dad, real brother, real friend, hard worker, responsible person, honest person, I can't see any person like you in my life, pray god for RIP.