யாழ். நெடுந்தீவு மேற்கைப் பிறப்பிடமாகவும், வவுனிக்குளம் சிவபுரம் 54 ஐ வதிவிடமாகவும், சுவிஸ் Münsingen Bern ஐ தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட சங்கரப்பிள்ளை பரமேஸ்வரராசா அவர்களின் நன்றி நவிலல்.
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
இன்றைய இக்கட்டான சூழ்நிலையிலும் இறுதிக்கிரிகையில் பெரும் திரளாக வந்து மலர் அஞ்சலிகள் செலுத்திய மக்களுக்கும், கண்ணீர் அஞ்சலிகள் பிரசுரித்தவர்களுக்கும், மிகவும் சிறப்பான முறையில் இறுதி ஈமச்சடங்கை நடத்திட உதவிய சுவிஸ் சைவ நெரிக்கூட சைவசமய குருமார்களுக்கும், பறை இசைக் கலைஞர்களுக்கும், பாடை அலங்கார கலைஞர்களுக்கும், நேரடி ஒளிபரப்பு செய்துதவிய கதம்பம் YouTube channel உரிமையாளருக்கும், நினைவு மலராகிய பரமேஸ்வர தீப நினைவுச் சுடரை சிறப்பாக அமைத்துதவிய கனடா சோம சச்சிதானந்தன் ,JJ print canada அவர்களுக்கு, லங்காசிறி யின் சேவைக்கும் மனமார்ந்த நன்றிகள்.
real hero, real husband , real dad, real brother, real friend, hard worker, responsible person, honest person, I can't see any person like you in my life, pray god for RIP.