களை பொங்கும் கருணை முகத்தோனே! எங்கள் வளைக்கையாள் சாந்தியின் ஆருயிர் கணவனே! பண்பில் விளைந்த நற்பிள்ளைகளைப் பெற்றவனே! கிளைத்துத் தழைத்து ஆல் போல் விழுதெறிந்து வாழ்ந்தவனே! மின்னலென மழை வானிடைச் சென்று மறைந்தனையோ? தங்கை சாந்தியின் இருகை பற்றி அவள் அங்கையில் நெல்லிக்கனி போல் இனித்தவனே! நங்கையவள் துடிதுடித்துத் துவளுகிறாள் உனையிழந்து மங்கை அவளைத் தவிக்கவிட்டுத் தன்னந்தனியே எங்கையா ராசனே! எங்கே போய் நீ மறைந்தாய்? பிறை சூடிய பெருமானின் பெயர் சூடிய பெருமானே! கறையிலாது கண்ணியமாய் வாழ்ந்த எங்கள் மாமனே! ஒரு குறையிலாது மனைவி மக்கள் உறவுகளென குலவிய சித்தப்பாவே! உறைபனி பொழியும் இந்தக் குளிர் காலத்தில் எமை விட்டு நிறை வாழ்வு காணுமுன்னே மறைந்ததேன் சொல்லையா? கனிதரும் நல்ல பயனுடைய தருவைப் போல் துணைவனை நனிபசு பொழியும் பாலென உள்ளம் கொண்ட அப்பாவை இனிவரும் தலைமுறையும் போற்றும்படி வாழ்ந்த மைத்துனரை பனிபொழிந்து கொண்டிருக்கும் துன்பத் தையே! எம் சோதரனை மனிதருள் மாணிக்கத்தை எங்கழைத்துச் சென்றனையோ? ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
real hero, real husband , real dad, real brother, real friend, hard worker, responsible person, honest person, I can't see any person like you in my life, pray god for RIP.