

அமரர் ரவிகுமார் முகேஸ்குமார்
பிறப்பு :
10 Mar, 1998 இறப்பு :
12 Oct, 2013
லண்டனைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்டிருந்த ரவிகுமார் முகேஸ்குமார் அவர்களின் 12ம் ஆண்டு நினைவஞ்சலி.
அமரர் சஜீவ் ரவிகுமார்
பிறப்பு :
05 Feb, 2003 இறப்பு :
02 Oct, 2019
லண்டனைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்டிருந்த சஜீவ் ரவிகுமார் அவர்களின் 6ம் ஆண்டு நினைவஞ்சலி.
பல்லாண்டு கடந்த பின்னும்
உங்கள் நினைவு நாடி
ஈர விழிகளுடன்
உங்கள் வதனம் தேடி
தீராத வேதனையை மனதில் பூட்டி
மாறாத நினைவுகளில் நாமும் வாழ்கின்றோம்..
எம் செல்வங்களே என்று உங்களை அழைக்க
அவனியில் நீங்கள் இல்லை- எனினும்
அலைமோதும் நினைவுதனில்
அழியாமல் நீங்கள் இருப்பீர்கள்...
நீங்கள் வளமோடு வாழ்வீர்கள் என
வாஞ்சையுடன்
நாங்கள் கண்ட கனவு ஏராளம்!
கண்மூடி விழிப்பதற்குள்
கணப் பொழுதினில்
நடந்தவைகள்
நிஜம் தானா என்று
நினைக்கும் முன்னே மறைந்தது ஏனோ!
நீங்கள் வான் உயரம் தெய்வத்தில்
ஒன்றாகி நின்று எமையெல்லாம்
பார்த்திடுவீர்கள்
என எண்ணி
உங்கள் நினைவு நாளில்
விழி அருவியாய்
ஏங்கியே
நிற்கின்றோம் உங்களைப்பார்த்து!!
காலங்கள் விடை பெறலாம்
ஆனாலும்
கண்முன்னே நிழலாடும்
உங்கள் நினைவுகள்
பல ஆண்டுகள் சென்றாலும்
எம் உயிர் உள்ளவரை
உங்களின் நினைவில்
வாழ்ந்து கொண்டிருப்போம்!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப்
பிரார்த்திக்கின்றோம்....
We lost your pleasant face for last 10 years but still be in our hearts and minds forever. -Sugu Family-