8ம் ஆண்டு நினைவஞ்சலி
Tribute
4
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
லண்டனைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த ரவி நிதர்சன் அவர்களின் 8ம் ஆண்டு நினைவஞ்சலி.
நீ எம்மை பிரிந்து ஆண்டுகள்
எட்டு ஆகிய போதும்
எம் இதயத்தை விட்டு விலகாமல்
என்றும் எம்மோடு நீ இருப்பாய்!
கண்களை இமை காப்பது போல
நாம் காத்து வந்த எம் செல்ல மகனே!
வையகத்தில் நீ வளமோடு வாழ்வாய் என
வாஞ்சையுடன் நாங்கள் கண்ட கனா ஏராளம்!
என் செய்வேன் எம் செல்லமே
தேடுகின்றோம் எம் பிள்ளை
போன திசை எது என்று தெரியாது?
மொட்டாகி பூவாகி காயாகி
கனியாகும் வேளையில் காத்திருந்து
படைத்தவன் பழி தீர்த்தானோ?
உடல் உயிரை பிரிந்தாலும்
உணர்வுடன் ஒன்றாகிப்போன எம் உயிரே!
உன்னை பிரிந்தே எங்கள்
உள்ளம் வாடுதே - பிரிவின்
தூரம் அறிந்தும்
உன்னைத் துரத்தித் தேடுதே!
எம்மோடு நீ வாழ்ந்த எழிலான வாழ்வை
என்றுமே நினைத்தபடி வாழ்கின்றோம்...
உந்தன் ஆத்மா சாந்தியடைய
பிரார்த்திக்கின்றோம்...
தகவல்:
குடும்பத்தினர்