
லண்டனைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த ரவி நிதர்சன் அவர்களின் 9ம் ஆண்டு நினைவஞ்சலி.
அலையும் அடித்து ஒய்ந்தது
காற்றும் வீச மறந்தது
கடவுளும் கல்லாய் போனானோ எம் செல்லம்
கால்பதிந்த போது காத்திருந்து காலன் சதிசெய்தானோ?
நீ இந்த மண்ணில் மீண்டும் பிறக்க வேண்டும்
உன்னை அள்ளி எடுத்து அணைக்க வேண்டும்
எம் அன்புச் செல்வம் நீ எமை விட்டு பிரிந்து
யுகமேயானாலும் உன் பசுமையான நினைவுகள் ஏராளம்....
எம் மனதை விட்டு அகலாது
நீ வளமோடு வாழ்வாய் என வாஞ்சையுடன்
நாங்கள் கண்ட கனவு ஏராளம்
கண்மூடி விழிப்பதற்குள் கனப் பொழுதில்
நடந்தவைகள் நிஜம் தானா என்று
நினைக்கும் முன்னே மறைந்தது ஏனோ!
எதற்காக ஐந்து பேரும் ஒன்றாக
எங்களை விட்டு போனீர்கள்
நட்பின் இல்லக்கணமா
இல்லை அந்த "காலன்" செய்த சதியா?
நீ வான் உயரம் தெய்வத்தில் ஒன்றாகி
நின்று எமை எல்லாம் பார்த்திடுவாய்
என எண்ணி விழி அருவியாய் ஏங்கி நிற்கின்றோம்..!
ஓம்சாந்தி! ஓம்சாந்தி!! ஓம்சாந்தி!!