லண்டனைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த ரவி நிதர்சன் அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.
எங்கள் அன்புச் செல்வமே நிதர்சா...
எங்களோடு நீண்ட நெடுநாட்கள்
வாழ்வாய் என்றும் எங்களுக்கு
பக்கபலமாய் இருப்பாய் என்றிருந்தோம்!
ஆனால் நீ நட்பு உயர்வென்று சொல்லி
நால்வருடன் கடல் நிலத்துள்
நிழல் தேடிச் சென்றுவிட்டாய்
இது நியாயம் தானா...
மாறாது எம் துயர்
மறையாது உன் நினைவு
ஆறாத்துயரில் எம்மை ஆழ்த்திவிட்டு
மீளாத் துயில் கொண்டதேனோ
சென்றுவிட்டாய் என்று எங்களால்
சிறிதும் எண்ணத்தோன்றவில்லையடா..
சொரியும் நீர் துடைக்க
வந்திடுவாய் என் மகனே...
நிழல் நீ தான் என்று இருந்தோமே..
பூப் போன்ற உன் அழகு முகத்தை
புகைப்படமாய் வைத்து
நித்தம் அழுகின்றோம் ஐயா!
உன் நினைவுகளோடு..
உன் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கும்
அப்பா, அம்மா, தம்பி, தங்கை,
பெரியம்மா, பெரியப்பா, சித்தப்பா, சித்தி,
மாமா, மாமி, மைத்துனர், மற்றும்
உற்றார், உறவினர்கள், நண்பர்கள்.
ரவி நிதர்சனுடன் கடலில் மூழ்கி பலியான குருசாந், கோபிகாந்தன், கேனுகன், இந்துசன் ஆகியோரின் ஆத்மா சாந்தியடையப் பிரார்த்திக்கின்றோம்.