லண்டனைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த ரவி நிதர்சன் அவர்களின் 4ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆர்ப்பரித்த கடல் அன்னை
அணைத்திட்டாள் உனையன்றே
ஆண்டு பல சென்றாலும்
ஆறாது துன்பமடா
பெருஞ்சோக கடல்தனிலே
பெற்றோர் எமை தவிக்கவிட்டு
பேரானந்தம் தந்தானோ நிதர்சா உனக்கு!
போய் வருகிறேன் அப்பா, அம்மா- எனக் கூறிச்
சென்றாய் நிதர்சா !
நிரந்தரமாய் உங்களை விட்டு போகிறேன்
என்று விடை சொன்னாயோ- மகனே!
உயிர் நண்பனோடு நட்பு பெரிதென்று
கடலுக்கு சென்றானே?
இப்போ எங்கள் கண்ணீரே
நதியாய் பெருகுதென்று போய் சொல்லு
நீரிலே பறிகொடுத்து
நிலத்திலே விதைத்து விட்டு
நெஞ்சிலே நெருப்பேந்தி
நித்தமும் வாடுகின்றோம்
காலங்கள் பல மாறும் - எம்
கோலங்கள் தடுமாறும் - உன்
பாலமுகம் மட்டும் என்றும்
காலமின்றி எம்முடன் வாழும்
உன் நினைவுகளோடு..
உன் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கும்
அப்பா, அம்மா, தம்பி, தங்கை,பெரியம்மா,
பெரியப்பா, சித்தப்பா, சித்தி, மாமா, மாமி,
பேரன், பேத்தி, மைத்துனர், மற்றும்
உற்றார், உறவினர்கள், நண்பர்கள்.