Clicky

5ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 12 DEC 1946
இறப்பு 18 JAN 2019
அமரர் இரத்தினம் இராதாகிருஷ்ணன் 1946 - 2019 வடலியடைப்பு, Sri Lanka Sri Lanka
Tribute 16 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

திதி: 22-01-2024
யாழ். வடலியடைப்பு பண்டத்தரிப்பைப் பிறப்பிடமாகவும், வடலியடைப்பு, சண்டிலிப்பாய், ஜேர்மனி, ஓமான், லண்டன், கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த இரத்தினம் இராதாகிருஷ்ணன் அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.  

குடும்பத்தின் குல விளக்கே
ஆண்டு ஐந்து போனாலும்
உம் நினைவுகள் எம்மை
விட்டு அகலவில்லை ஐயா!

உருக்குலைந்து மாய்கின்றோம்
வருடங்கள் ஐந்து வந்திட்ட போதினிலும்
நம்ப மறுக்கிறதையா எங்கள் மனங்கள்!

வானத்தை விட்டு நிலவையும்
வாசத்தை விட்டு மலரையும்
பிரிக்க முடியாது- அதுபோல
உங்கள் நினைவுகளை- எங்கள்
நெஞ்சை விட்டும் விலக்கமுடியாது!

நெஞ்சில் உங்கள் நினைவுகளை சுமந்தே
நெடுங்காலம் நாம் இங்கே
நிலைத்து வாழ்வோமே
வானில் விண்மீனாய் இருந்து
எம் வாழ்வை வளப்படுத்துவீரே!

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!  

தகவல்: குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்