Clicky

3ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 12 DEC 1946
இறப்பு 18 JAN 2019
அமரர் இரத்தினம் இராதாகிருஷ்ணன் 1946 - 2019 வடலியடைப்பு, Sri Lanka Sri Lanka
Tribute 16 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

திதி: 15-1-2022

யாழ். வடலியடைப்பு பண்டத்தரிப்பைப் பிறப்பிடமாகவும், வடலியடைப்பு, சண்டிலிப்பாய், ஜேர்மனி, ஓமான், லண்டன், கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த இரத்தினம் இராதாகிருஷ்ணன் அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.

ஆண்டு மூன்று அகன்றோடி மறைந்தாலும்
 உங்கள் நினைவு என்றும் மறக்காது
ஒவ்வொறு நொடிகளிலும்
 இதயத்தின் துடிப்பைப் போல்
அருகிலே நீங்கள் வாழ்வதை நாம் உணருகிறோம்!.

உங்கள் நினைவுகள் எங்களைத் தாலாட்ட
மீண்டும் மீண்டும் தேடுகின்றோம்
ஏங்கித் தவிக்கின்றோம் உமை நினைத்து

உங்கள் அன்பு முகம் மறைந்தாலும்
அழியாது நினைவலைகள்!
கண்முன்னே வாழ்ந்த காலம்
கனவாகிப் போனாலும் எங்கள் முன்னே
உங்கள் முகம் எந்நாளும் உயிர் வாழும் அப்பா!

ஆண்டுகள் எத்தனை ஆனாலும்
அகலாது உம் பிரிவு
மறக்கமுடியுமோ? எம்மையெல்லாம்
ஆழாத்துயரத்தில் ஆழ்த்திவிட்டு
மீளாத்துயில் சென்றதை?..!

எம் அன்புத்தெய்வத்தின் ஆத்மா சாந்தியடைய
 எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!!

தகவல்: குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்