மரண அறிவித்தல்
பிறப்பு 12 DEC 1946
இறப்பு 18 JAN 2019
அமரர் இரத்தினம் இராதாகிருஷ்ணன் 1946 - 2019 வடலியடைப்பு, Sri Lanka Sri Lanka
Tribute 16 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். வடலியடைப்பு பண்டத்தரிப்பைப் பிறப்பிடமாகவும், வடலியடைப்பு, சண்டிலிப்பாய், ஜேர்மனி, ஓமான், லண்டன், கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட இரத்தினம் இராதாகிருஷ்ணன் அவர்கள் 18-01-2019 வெள்ளிக்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இரத்தினம் கனகேஸ்வரி தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வரும், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,

பொன்மலர் அவர்களின் அன்புக் கணவரும்,

சுதந்திரராஜா(ரஞ்சன்- கனடா), தயாநிதி(ரதி- லண்டன்), கலாநிதி(கலா- லண்டன்), ஜெயக்குமார்(குமார்- அபுதாபி), சந்திரகுமார்(சந்திரன்- லண்டன்), ஜெயவதனி(வதனி- கனடா), உதயகுமார்(ரவி- லண்டன்), மங்களரூபன்(ரூபன்- லண்டன்) ஆகியோரின் அருமைச் சகோதரரும்,

யசோதரி, நடனசிவம், யோகேஸ்வரன், திருச்செல்வி, கோமதி, ரவீந்திரன், கலைச்செல்வி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சயந்தன்(சயன்), சஜித்தா(சஜி) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

தனலக்‌ஷ்மி(தனா), தனாகரன்(கரன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

பிருந்தன், சாயீஷா, அஜீஷன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்