1ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 21 AUG 1946
இறப்பு 23 JUL 2020
அமரர் இராசையா சரஸ்வதி 1946 - 2020 புத்தூர், Sri Lanka Sri Lanka
Tribute 0 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். புத்தூரைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி உருத்திரபுரத்தை வதிவிடமாகவும் கொண்டிருந்த இராசையா சரஸ்வதி அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

திதி:11-08-2021

ஆண்டாயிரம் சென்றாலும்
ஆறாதம்மா எமதுள்ளம்
ஆறாத துயரம் இன்னும் –நெஞ்சில்
நீராக நின்றெரியுதம்மா!

பாசமென்றால் எதுவென்று நாமறிய
பண்பில் உயர்ந்து நின்றாய்
நேசமிது தானென்று – எங்கள்
நெஞ்சமதை நெகிழ வைத்தாய்!

சிரித்த முகம் மாறாத
சிறுபிள்ளை போன்ற உள்ளம்
உற்றார் உறவினரை - வரவேற்று
உபசரிக்கும் உயர்ந்த குணம்
வாடி நிற்கும் மனிதருக்கும்
சேவை பல செய்தாயம்மா!

நினைவுகள் தான் எம்மிடம்
நிஜத்தில் ஆண்டவன் சன்னிதானத்தில்
ஆறாத் துயிலில் கலந்திருக்கும்
உங்கள் பாதங்களில் கண்ணீர்த் துளிகளாலே
ஆராதனை செய்கின்றோம் அம்மா

அம்மா......எண்ணிலடங்கா நினைவுகள் எம்முடன்!!!

எமது அன்புத்தாயாரின் ஆத்மா இறைவனடி சேர எல்லாம் வல்ல பாலையடி ஸ்ரீ அருட்செல்வ விநாயகர், பொறிக்கடவை கண்ணகை அம்மன், உருத்திரபுரீஸ்வரர் சமேத உருத்திபுரீஸ்வரநாயகி அருள் வேண்டி வணங்குகிறோம் ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!

அன்புடன், கணவர், பிள்ளைகள், சகோதரர், பேரப்பிள்ளைகள், பூட்டன், உற்றார், உறவினர், நண்பர்கள். 

தகவல்: குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்

No Tributes Found Be the first to post a tribute

Photos

No Photos

Notices

நினைவஞ்சலி Tue, 18 Aug, 2020