9ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் இராசையா நாகேஸ்வரன்
Original Owner of Megaa Super Store - Burlington Road, New Malden
வயது 49
Tribute
14
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். அளவெட்டி வடக்கு அழகொல்லையைப் பிறப்பிடமாகவும், லண்டன் Chessington ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த இராசையா நாகேஸ்வரன் அவர்களின் 9ம் ஆண்டு நினைவஞ்சலி.
எங்கள் குடும்பத்தின் குலவிளக்கே அப்பா!
ஆண்டுகள் ஒன்பது கடந்தாலும்
எமை ஆளாக்கிய தந்தையின் பிரிவு
ஆறாது என்றுமே எம் மனதில்!
கண்முன்னே வாழ்ந்த காலம் கனவாகிப் போனாலும்
எம்முன்னே உங்கள் முகம் எந்நாளும்
உயிர் வாழும் அப்பா!
இரவும் பகலும் உங்கள் முகம்
இதயம் வலிக்கிறது அப்பா...
மறுபடியும் உங்களைப் பார்க்க மாட்டோமா
என ஏங்கித் தவிக்கிறோம் அப்பா...
ஓயாது உங்கள் நினைவு வந்து வந்து
எதிர்கொள்ள ஒவ்வொரு கணமும் துடிதுடிக்க
உயிரோடு வாழ்கின்றோம்!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!!!
தகவல்:
குடும்பத்தினர்
my heartfelt condolence