2ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் இராசையா நாகேஸ்வரன்
Original Owner of Megaa Super Store - Burlington Road, New Malden
வயது 49
Tribute
11
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ். அளவெட்டி வடக்கு அழகொல்லையைப் பிறப்பிடமாகவும், லண்டன் Chessington ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த இராசையா நாகேஸ்வரன் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
எங்கள் அப்பா நாகேஸ்
எங்களை பத்து மாதம்
கருவறையில் சுமந்தவள்
என் தாய் என்றால்
என் தாயையும் சேர்த்து
எங்களையும்
தன் நெஞ்சில் சுமந்தவர்
எங்கள் அப்பா
எங்கள் அப்பாவை விட
சிறந்தவர் இவ்வுலகில் இல்லை.
நல்ல இதயங்களை
பார்ப்பது கடினம்
என்றும் மகிழ்ச்சியான
நல்ல இதயம் நாகேஸ் உடன்
வாழ்ந்தது எங்கள் அதிஷ்டம்
நீங்கள் இருக்கும் போது
உங்களுடன் பேசுவது வைரம் என
நினைத்து பழகிய நண்பர் கூட்டம்
இப்போ எங்கே?
நாங்கள் இப்போ தனிமையில்
அநாதைகளாக நிற்கின்றோம்
இன்றுடன் ஈராண்டு முடிந்தது
என்றும் எங்களால் உங்களை
மறக்க முடியவில்லை.
மனைவி-சுபாஜினி , பிள்ளைகள்-டிலக்ஷா, டிலக்ஷன்.
தகவல்:
மனைவி, பிள்ளைகள்