யாழ். கல்வியங்காட்டைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட இராசலிங்கம் சரஸ்வதி அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
எம் இதயமென்னும் கோயிலில்
தெய்வமாய் நிறைந்திட்ட அன்னையே!
நம்பமுடியவில்லை ஓராண்டு கடந்ததை
அன்பின் சிகரமாய் அரவணைப்பின்
அர்த்தமாய் வாழ்ந்த எம் அன்னையே!
வார்த்தைகளில் வடிக்க முடியவில்லை
நீ இல்லா வெற்றிடத்தை
ஆண்டொன்று கடந்தாலும் அம்மா
உன் இன்முகமும் புன்சிரிப்பும்
எம் மனதை விட்டகலவில்லை அம்மா!!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..
அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு தினம் எதிர்வரும் 24-11-2025 திங்கட்கிழமை ந.ப 12.00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெறும். அத்தருணம் தாங்கள் தங்கள் குடும்ப சகிதம் வருகை தந்து அன்னாரின் ஆத்ம சாந்திப் பிரார்த்தனையிலும், அதனைத் தொடர்ந்து நடைபெறும் மதியபோசன நிகழ்விலும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
புலவனார் வீதி, கல்வியங்காடு
அப்பம்மா நீங்கள் இல்லாதது என் வாழ்கையில் ஒரு வெறுமை, உங்கள் சிரிப்புகள், உங்கள் கதைகள், எல்லாம் இப்போது நினைவாகக் கரைந்தவை. உங்கள் அன்பான கைகளில் முத்தங்கள், இப்போது எங்கு போய்விட்டனவோ, என்னை...