
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
ஐயா உங்கள் விழுதுகள் நாங்கள், இன்று நீங்கள் இன்றி தவிக்கின்றோம் ஆணிவேரை இழந்த ஆலமரம் போல.
புன்னகையின் இலக்கணம் ஒன்று,
கண்மூடி தூங்குகின்றது, எல்லோரின் கனத்த கண்ணீரின் வெள்ளத்தில்.
என் அம்மா என்னை பெற்றெடுத்த நாளில் இருந்து, எனக்கு என் தந்தைக்கு தந்தையாக, தாய்க்கு தாயாக, ஆசானுக்கு ஆசானாக, என் வாழ்க்கை வழிகாட்டியாக என்னை வழிகாட்டி என்னை சீராட்டி , பாராட்டி என்னை வளர்த்த என் ஐயாவை நான் இழந்து தவிக்கிறேன்.?
என்னை சிறுவயதிலிருந்து தூக்கி வளர்த்த என் ஐயாவை எனி நான் என்று காண்பேன்.?
பேரனை பெற்றுடுத்தது என்னமோ அம்மா அப்பாதான், என்னை தூக்கி வளர்த்தது என்னமோ ஐயா நீங்கள் தானோ.
மழழை பருவத்தில் நான் செய்த குறும்பகளை எப்படி எல்லாம் இரசித்தீர்கள்.
“எப்ப வாராய் “என்று கதைக்கும் போது கேட்பிங்களே ஐயா.
உங்கள் இறுதி நிமிடத்தில் உங்கள் அருகில் இருக்க முடியாமையை இட்டு மனம் நோகுகின்றேன்.
என்னை மன்னித்துவிடுங்கள் ஐயா????.
பாசத்தில் மலையளவு அன்பையும், கோபத்தில் கடுகளவையும் காட்டி என்னை வளர்த்த என் ஐயா எங்குபோனீர்கள்.
உங்களை இழந்து தவிக்கின்றோம் ஐயா.
குடும்பத்தின் தலைமகனாக பிறந்து, குடும்பத்தில் எல்லோருக்கும் வழிகாட்டிய குடும்ப தலைவனை நாங்கள் இழந்து தவிக்கின்றோம்?
உங்கள் ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகின்றேன் ஐயா.
ஓம் சாந்தி ???
பேரன் மகிந்தன்❤️
Write Tribute