1ம் ஆண்டு நினைவஞ்சலி

Tribute
16
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். வரணி நாவற்காட்டைப் பிறப்பிடமாகவும், வரணி கரம்பைக்குறிச்சியை வதிவிடமாகவும் கொண்டிருந்த இராசையா இரத்தினம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 11-09-2023
முதலாம் அண்டு நினைவு நாள் வந்ததோ
ஒவ்வொரு நிமிடமும் உங்கள் நினைவுதான் அப்பா!
எங்கள் அன்பு அப்பாவே
இதயத் துடிப்பின் அருமருந்தே
காலம் செய்த கோலத்தினால்
ஒவ்வொரு கணப் பொழுதும் துடிக்கின்றோம்!
உங்கள் ஒழுக்கம் நற்பண்பு மதிப்புகள் யாவும்
எங்கள் வாழ்வில் என்றென்றும் வழிகாட்டியாக இருக்கும்!
துன்பம் இன்றி கஷ்டங்கள் இன்றி
எங்களை காத்தீரே எம் தந்தையே!
எம்மை விட்டு பிரிந்ததேனோ?
மாதங்கள் பன்னிரெண்டு ஆனாலும் அழியாது
எம் துயரம் மறையாது உங்கள் நினைவு!
மீண்டும் ஒரு பிறவி உண்டென்றால் உங்களுக்கு
பிள்ளையாக பிறக்கும் பேறு பெற வேண்டும்- அப்பா!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்...
தகவல்:
குடும்பத்தினர்