2ம் ஆண்டு நினைவஞ்சலி

Tribute
16
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். வரணி நாவற்காட்டைப் பிறப்பிடமாகவும், வரணி கரம்பைக்குறிச்சியை வதிவிடமாகவும் கொண்டிருந்த இராசையா இரத்தினம் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
விழிமூடி எம்மை வழிகாட்டும்
எங்கள் ஒளியான தந்தையே- ஓடி வருவீரோ
எம் நல்வாழ்வை காண நேரில் வருவீரோ!
துள்ளித் துள்ளி நாங்கள் போகையில்
அள்ளி அணைத்த தங்கமே எம் தந்தையே
தள்ளி நின்று எள்ளி நகையாடும்
உலகில் துளி கூட துவழாமல் எம்மை
தூக்கி விட்ட தந்தையே!
வானுலகம் சென்றாலும் எம்
வழித்துணையாவும் என்றும்
இருந்துவிடுவீர்கள் ஐயா!!!
நீங்கள் மறைந்து இரண்டு ஆண்டுகள் ஆனாலும்
இன்றும் என்றும் எம் நெஞ்சத்தில்
உங்கள் நினைவுகள் நிலைத்திருக்குமையா!!!!
தகவல்:
குடும்பத்தினர்