

நாவற்காட்டின் நடுவே நல்லமரம் ஒன்று சாய்ந்தது போல் உங்கள் ஆயுள் பிரிந்ததை இட்டு வருந்துகிறேன் மச்சான். இருப்பினும் கொடுத்து வைத்தவன் நீ! மாமா கண்ட கனவு உன்னில் நிறைவேறியதை இட்டு பெருமிதம் கொள்ளுகிறோம். நான் இறந்த பிறகு என் பிள்ளைகள், பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள் எல்லோரும் சுற்றி நின்று தீபம் ஏந்த வேண்டுமென்று மாமா சொன்னார். ஆனால் முடிவில் அனேகர் அங்கில்லை. ஆனால் உமக்கோ எல்லோரும் கூடி நின்று அஞ்சலி செலுத்தும் வாய்ப்பு கிடைத்ததை எண்ணும் போது கலங்கிய என் உள்ளம் ஆறுதல் அடைகிறது மச்சான். வாழ்க்கை ஓட்டத்தை வளமாக முடித்துவிட்டாய்! கிளை விட்டுப்படர்ந்த ஆலமரம் போல வேர்கள் விட்டு விழுதுகள் விட்டு எங்கள் குலம் விளங்க வாழ்ந்தாய். உன் சந்ததியும் சந்தானமும் பெருகும் மரணமே மனிதனின் முடிவு என்று சொல்லி உன் ஓட்டத்தை முடித்துக் கொண்டாய்! மறக்க முடியவில்லை மச்சான். நாம் இருவரும் பழகியதை நினைத்து நினைத்து கண்ணீர் வடிக்கிறேன். காலம் கடந்து விட்டது. எங்கள் நினைவில் என்றும் நீ இருப்பாய்! பரத்திலும் உனக்கொரு இடத்தை இறைவன் வைத்திருப்பார் உன் ஆத்ம சாந்திக்காய் வேண்டி எங்கள அனைவரது கண்ணீரையும் காணிக்கையாக்குகிறோம். உன்னை மறவா அன்பு மச்சான் கணேஸ்!??????