திதி:30/11/2025
யாழ். நீராவியடி பிறவுன் றோட்டைப் பிறப்பிடமாகவும், காங்கேசன்துறை, கிளிநொச்சி திருவையாறு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், சுவிஸ் Basel ஐ தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட இராசையா மகேந்திரன் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
எங்கள் அன்பு அப்பாவே
இதயத் துடிப்பின் அருமருந்தே
காலம் செய்த கோலத்தினால்
ஒவ்வொரு கணப் பொழுதும்
துடிக்கின்றோம்!
ஆண்டு இரண்டு ஆனாலும் மனம்
ஆற மறுக்கிறது- அப்பா
புன்னகை புரியும் உங்கள்
முகம் தெரிகிறது தினம் தினம்!
வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து வானடைந்து
இரண்டு ஆண்டு ஆனாலும் ஐயா
ஆறாது உங்கள் பிரிவுத்துயர்!
அன்பாலும் பண்பாலும் அரவணைத்து
எம்மை வழிநடத்திய அந்த நாட்கள்
எம் நினைவலைகளில் என்றும் சுழல்கிறதே ஐயா!
நீங்கள் எம்மை விட்டு நீண்டதூரம் சென்றாலும்
உங்கள் அறிவுரைகள் அரவணைப்புக்கள்
என்றும் எங்கள் நெஞ்சங்களில் உயிர்வாழும் ஐயா!
மறையாத உங்கள் நினைவு!
மீண்டும் ஒரு பிறவி உண்டென்றால்
உங்களுக்கு பிள்ளைகளாக பிறக்கும்
பேறு பெற வேண்டும்- அப்பா!
என்றென்றும் உங்கள் நினைவுகளோடு
வாழ்ந்து கொண்டிருக்கும்
உங்கள் அன்பு மனைவி, பிள்ளைகள்,
மருமக்கள், பேரப்பிள்ளைகள்..!
உங்கள் அப்பாவின் உடல்தான் இவ்வுலகை விட்டுப் பிரிந்தது. அவர் நினைவுகள் என்றும் உங்களுடனேயே நீங்கள் எங்கெல்லாம் செல்கின்றீர்களோ அங்கெல்லாம் பாதுகாப்பாக உங்களுடனேயே பயணிக்கின்றது. நினைத்த நேரம்...