திருகோணமலை சிவன் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Chur ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த இராஜேந்திரம் லோகிததாசன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
இன்னுயிர் தந்தையே! 
நீங்கள் இல்லையென்ற வாழ்வு 
இருள் மயமானதப்பா 
ஆண்டொன்று ஆனபோதும் 
அகலவில்லை உங்கள் பிரிவின் துயர் 
அப்பா நித்தம் நித்தம் கனக்கிறது 
நிலைகொண்ட நினைவலைகள் 
அன்பால் நிர்வாகம் அடக்கியாண்ட 
ஆண்மகனார் நீங்களல்லோ! 
அகிலத்தை விட்டு அவசரமாய் 
அகன்றதனால் ஆறாமல் தவிக்கின்றோம் 
ஒளியிழந்த அன்னையும் 
உறங்காமல் புலம்புகிறார்.. 
பண்பை, பக்குவத்தை பல வகையாய் 
சொல்லித் தந்தீர்கள் - அன்புத் தந்தையே! 
ஈடுசெய்யா நின்னுறவைத் தொலைத்துவிட்டு 
துயர்கொள்ளும் அகத்துக்குள் 
அனுதினமும் ஒலிக்கிறது உங்கள் குரல் 
எங்கள் அன்பு அப்பாவே 
இதயத் துடிப்பின் அருமருந்தே 
காலம் செய்த கோலத்தினால் 
ஓவ்வொரு கணப் பொழுதும் 
துடிக்கின்றோம்! 
மீண்டும் ஒரு பிறவி உண்டென்றால் 
உங்களுக்கு பிள்ளைகளாக பிறக்கும் 
பேறு பெற வேண்டும் அப்பா! 
என்றென்றும் உங்கள் நினைவுகளோடு 
வாழ்ந்து கொண்டிருக்கும் 
உங்கள் அன்பு மனைவி, பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்.
                    
                    
                    
            
R.I.P