2ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் புவனேஸ்வரி பாலசுப்ரமணியம்
1938 -
2024
சுருவில், Sri Lanka
Sri Lanka
Tribute
21
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
திதி:26/03/2026
யாழ். சுருவில் ஊர்காவற்துறையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Neuilly-sur-Marne ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த புவனேஸ்வரி பாலசுப்ரமணியம் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
இன்றோடு ஈராண்டு அம்மா
நீங்கள் இல்லை இங்கு
நேற்றுவரை வாழ்ந்துவிட்டோம்
உன்னினைவில் நாம் இங்கு
நினைக்கையில் வியப்பாய்
நிஜமாய் நாம் வாழ்கிறோமா?
அம்மா என்று நாமழைக்க
யார் இங்கு நமக்குண்டு
எம் தாய்க்கு நிகராக
இவ்வுலகில் யாருண்டோ?
ஆண்டுகள் ஆனாலும்
ஆறவில்லை காயமம்மா
மீண்டும் உன் வயிற்றினில்
பிறந்திட வேண்டுமம்மா
உன் மடியில் வாழ்ந்திட
வரம்வேண்டி வா அம்மா
ஆண்டு இரண்டானாலும்
அழியாத அன்புருவாக
எங்கள் நெஞ்சங்களில் வாழும்
பண்புருவான அம்மாவே
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
குடும்பத்தினர்