1ம் ஆண்டு நினைவஞ்சலி


அமரர் புவனேஸ்வரி பாலசுப்ரமணியம்
1938 -
2024
சுருவில், Sri Lanka
Sri Lanka
Tribute
21
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
திதி:06/04/2025
யாழ். சுருவில் ஊர்காவற்துறையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Neuilly-sur-Marne ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த புவனேஸ்வரி பாலசுப்ரமணியம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்பின் திருவுருவே!
ஆருயிர்த் தெய்வமே!
அகிலத்தை விட்டு ஆண்டவன் அடி சேர்ந்து
ஓராண்டு துன்பத்தின் விளிம்பில் நின்று
துடிக்கின்றோம் எங்கள் அம்மா
எங்கேயென்று தேடுகின்றோம்
எங்கள் அருமை அம்மாவே!
எம்மை விட்டு எங்கு சென்றீரோ?
எங்களை விட்டு பிரிந்திடவே
உங்களுக்கு என்றும் மனம் வராதே
வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து
வானடைந்து ஓர் ஆண்டு ஆனாலும்
ஆறாது உங்கள் பிரிவுத் துயர்
எங்களை அன்பாலும் பண்பாலும்
அரவணைத்து வழிநடத்திய அந்த
நாள் எங்களை விட்டு நீண்ட
தூரம் சென்றாலும் ஆறாது அம்மா
உங்கள் பிரிவுத்துயர்
உங்கள் பிரிவால் வாடும் பிள்ளைகள்,
மருமக்கள், சகோதரர்கள்,
பேரப்பிள்ளைகள்.
தகவல்:
குடும்பத்தினர்