Clicky

4ம் ஆண்டு நினைவஞ்சலி
அன்னை மடியில் 02 JUN 1986
ஆண்டவன் அடியில் 19 JUL 2021
அமரர் புவனேந்திரன் அனோஜ்
வயது 35
அமரர் புவனேந்திரன் அனோஜ் 1986 - 2021 Basel, Switzerland Switzerland
Tribute 48 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

சுவிஸ் Basel ஐப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த புவனேந்திரன் அனோஜ் அவர்களின் 4ம் ஆண்டு நினைவஞ்சலி.

கண் நிறைந்த நீரோடு...!
உம் கனவு சுமந்த நெஞ்சோடு...!
இரத்த கண்ணீர் வடித்து தேடுகின்றோம்!
எங்கு சென்றாய் மகனே....?

கிளை விரித்த மரத்தில்.....
ஒரு கூடு கட்டி அழகிய குடும்பமாய்
வாழ்ந்து வந்தோம்....
நீ இல்லாத இடைவெளியை
எண்ணி எண்ணி ஏங்குகின்றோம்

கலைந்து செல்லும் மேகமென
காலங்கள் கடந்து போகின்றனவே
 ஆனாலும் உன் நினைவுகள்
புயலென எரிமலையென
கடலலையென எம் மனங்களில்
பொங்கிப்பிரவாகித்துக் கொண்டே இருக்கும்

காலங்கள் கடந்து சென்றாலும்
ஒவ்வொரு நொடிகளிலும் இதயத்தின்
துடிப்பைப் போல் அருகிலே
நீ வாழ்வதை நாம்
உணருகின்றோம் இக் கணமும்
உங்கள் நினைவால் துயருகின்றோம்..

உன் ஆத்மா சாந்தியடைய
 இறைவனைப் பிரார்திக்கின்றோம்.

உங்கள் பிரிவால் வாடும் குடும்பத்தினர் 

தகவல்: குடும்பத்தினர்

Summary

Photos

No Photos

Notices

மரண அறிவித்தல் Tue, 20 Jul, 2021
நன்றி நவிலல் Wed, 18 Aug, 2021