சுவிஸ் Basel ஐப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த புவனேந்திரன் அனோஜ் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்பு என்னும் பறவை
சிறகடித்து வானில் பறக்கும் போது
விதி என்னும் அம்பினால்- அது
அடிபட்டு மாய்ந்தது போல்
வாழ்ந்த கதை முடியும் முன்
இறந்திடவா நீ பிறந்தாய்!
நீ ஆண்டகதை அழிவதில்லை
நீ எங்கே சென்றாய் தனியே!
உன் மலர்ந்த பூ முகமும்
மகிழ்ச்சி பொங்கி நிற்கும்- உன்
முத்தான புன் சிரிப்பையும்
பார்ப்பது எங்கே!
காற்றும் கலங்குதையா- இனி
காணாதோ உன் முகத்தையென்று!
பேராசை இல்லாத பாசம் அதிகம் வைத்தாய்,
ஒளி மறைவு இல்லாத உன்
ஒப்பற்ற பேச்சினை
எப்போது கேட்போம் ஐயா!
உன்னோடு கூடி வாழ்ந்ததினால்
கொண்டிருந்தோம் குதூகலம்!
உன் இழப்பால் எல்லாம் ஒழிந்ததையா!
உன்னோடு ஒழிந்ததையா!
புதிய முகவரி தேடி புன்னகையோடு காத்திருந்தாய்
கண்ணுறங்கு வேளையிலே- விண்ணவனும்
வருந்தி அழைத்தானோ!
உன்னை பிரித்து எடுத்து
எங்களை தவிக்க விட்டு
சென்றான்- இன்று
தனிமையிலே உன்னை இழந்துவிட்டு
நாங்கள் அழுகின்றோம்
ஓம் சாந்தி! ஒம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
உங்கள் பிரிவால் வாடும்
அப்பா, அம்மா,
மனைவி, மகன்,
சகோதர்கள், மைத்துனர்கள், மருமக்கள்