சுவிஸ் Basel ஐப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த புவனேந்திரன் அனோஜ் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டு இரண்டு ஓடி மறைந்திட்டாலும்
நேசங்கொண்ட நாங்கள் உன்னைத் தேடுகின்றோமே
உன் வருகை காணாது உன் குரல் கேட்காது
ஏங்கி தவிக்கின்றோமே அனோஜ்!
ஆலமரமொன்று அடி சாய்ந்ததோ
வேரோடி விழுது விட்ட பெரு விருட்சமே
எமை பாரோடு தவிக்க விட்டு பாதியிலே போனதேனோ
வானத்து நிலவாய் வலம் வந்து
அரும்பணியாற்றிய அற்புதமே
இப்பிறவியில் அல்ல எப்பிறவியிலும்
யாம் காணோம் உமைப் போன்ற அருமருந்தை
எம் உயிரான உயிர்ப்பூவே சிதைத்தவன் யார்?
அவன் காலனேயாயினு கழுவலேற்றுவோம்
கால தேவன் எம் ஊருக்கு உவந்தணித்த உத்தமரே
நீரின்றி தவிக்கும் எம் நிலையை பாரும்
இனி இப்புவியில் நாம் எப்போ உம் முகம் பார்ப்போம்.
கண் முன்னே வாழ்ந்த காலம்
கனவாகிப் போனாலும்
எங்கள் முன்னே உன் முகம்
எந்நாளும் உயிர் வாழும்!
மண் விட்டு மறைந்து
நீ விண்நோக்கிச் சென்றாலும்
கண் விட்டு மறையாமல்
கன காலம் இருப்பீர்.
பாசமாய் கூடி வாழ்ந்த கூட்டை விட்டு
எங்குதான் பறந்து சென்றீர்?
உன் சிரிப்பும் உயர்வான பேச்சும்
என்றும் எங்களைவிட்டு நீங்காது
உன் நினைவால் தினம் கலங்கி நிற்கின்றோமே!
உன் குழந்தை உன் படம் பார்த்து அப்பா
என்று கூப்பிடு உனக்கு கேக்க வில்லையா?
சொல்லாமல் பிரிந்தாயே திரும்ப முடியாத
பாதையில் !
மீண்டும் எங்களிடம் வருவாயா என்று
ஏங்கி தவித்து நிற்கின்றோமே!
உன் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்திக்கின்றோம்.
உங்கள் பிரிவால் வாடும்
அப்பா, அம்மா, மகன்,
குடும்பத்தினர்