சுவிஸ் Basel ஐப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த புவனேந்திரன் அனோஜ் அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.
சிப்பிக்குள் முத்தாய்
அன்னையின் கருவறையில்
இப்புவியில் உதித்த செல்கதிர்
சுடரே
ஆண்டு 3 கடந்த பின்பும்
ஓயவில்லை நினைவலைகள்....
நீ வளமோடு வாழ்வாய் என
வாஞ்சையுடன்
நாங்கள்
கண்ட கனவு ஏராளம்...!
கண்இமைப் பொழுதிலே
எம் கனவுகளை எல்லாம்
கனவாக்கி
கண் மறைந்து போனாயே
மனதை ஆழ்ந்த துயரில் ஆக்கிபோனாய்
நீ மீண்டும் உதிர்ந்து வருவாயென ஏங்குகிறோம் !
எத்தனை ஆண்டுகள் சென்றாலும்
உன் நினைவுகள் எங்களை விட்டு பிரியாதடா?
உன் வரவை பார்த்து பார்த்து ஏங்குது எம்மனம்!
பாச நதியில் ஒர்வஞ்சம் அறியா ஈரநெஞ்சம்
படைத்தவனே
ஆண்டுகள் பற்பல பறந்தாலும்
உங்கள் நினைவுகள் மறையாது
எங்கள் மனத்திரையில்
உங்கள்
நினைவுகள் வந்து வந்து மீட்டிச் செல்கிறது
அன்று போல் இன்றும் எம்மோடு
இருப்பது போல்
மனதை வருடி செல்கிறது
உங்கள் புன்சிரிப்பும் பாசம் நிறைந்த
அரவணைப்பும்
எங்களை ஒவ்வொரு
பொழுதும் ஏங்க வைக்கின்றது
கனவுகள் கூட கலையலாம்
ஆனால்
உன் நினைவுகள்
என்றும் என் மனதை விட்டு கலையாது
இமை மூடி தூங்கினாலும்
விடை தேடி அழுகின்றது இதயம்
மனம் மட்டும் மௌனித்து
உன் நிலை தன்னை ஏற்கின்றது
யாரிடம் பகிர்வோம்
இந்த மனம் படும் வேதனையை
நீ இல்லா இவ்வுலகில்
நிம்மதியோ எமக்கில்லை- ஆனாலும்
உன் நினைவுகள் என்றும் எம்முடன் நிரந்தரம் தான்
வையக வாழ்வு முடியும் வரையில்
உனது இனிய நினைப்போடே
எங்கள் காலம்...
உன் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்திக்கின்றோம்.
உங்கள் பிரிவால் வாடும்
குடும்பத்தினர்