4ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் பொன்னம்பலம் சுப்பிரமணியம்
வயது 93
அமரர் பொன்னம்பலம் சுப்பிரமணியம்
1926 -
2019
அனலைதீவு 3ம் வட்டாரம், Sri Lanka
Sri Lanka
Tribute
15
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். அனலைதீவு 3ம் வட்டாரம் சந்தியா வளவைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பொன்னம்பலம் சுப்பிரமணியம் அவர்களின் 4ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி : 13-01-2024
நான்கு ஆண்டுகள் உருண்டோடி மறைந்தாலும்
அகலாது உங்கள் அன்புமுகம்
எம் நெஞ்சை விட்டு
பாசத்தைப் பொழிந்து
பண்பினை ஊட்டி
பார் போற்ற எமை வளர்த்தீர்கள்
அப்பா என்ற வலிமையை நீங்கள்
இல்லாத
காலங்கள் எமக்கு உணர்த்துகின்றன
இப்போது நாம் வாழும் வாழ்வின் பெருமைகளுள்
உங்கள் வியர்வைத் துளிகள்தான்
ஒளிந்து மெருகூட்டுகின்றன
நாம் மகிழ்ச்சியாக இருக்க நம்மிடம்
ஆயிரம் விடியல்கள் இருந்தாலும்
சோகத்தை பகிர ஒரு நல்ல துணையாக
இறைவன் நமக்களித்த வரமாக நீங்கள் இருந்தீர்கள்!
நீங்கள் எமை விட்டுச் சென்றாலும்
ஆறவில்லை மனது, ஆண்டுகள் பல கோடி
சென்றாலும் ஆறாது ஆறாது நம் நினைவுகள்...!
தகவல்:
குடும்பத்தினர்
எங்களது ஆழ்ந்த அனுதாபங்களை ஏற்றுக்கொள்ளவும் .